புலிவால் -திரைவிமர்சனம்!!!

11th of February 2014
சென்னை::
அந்தரங்க விளையாட்டு, அலைபேசி மூலம், வலைப்பதிவானால் விளையும் விபரீதங்களை சொல்கிறது, புலிவால் கார்த்திக் (பிரசன்னா) பெரும் பணக்காரன். அவனுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் பவித்ரா (இனியா) திருமணத்திற்கான இரண்டு மாத இடைவெளியில், நிறுவன ஊழியர் மோனிகாவுடன் கார்த்திக் நடத்தும் காம களியாட்டம், அவனது அலைபேசியில் பதிவாகி விடுகிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணம் பற்றி அறிந்து வெகுண்டெழும் மோனிகாவை சமாதானப்படுத்த வரும் கார்த்திக், தன் அலைபேசியை தொலைத்து விட, பல்பொருள் அங்காடியில் வேலை பார்க்கும் காசி (விமல்) கையில் அது கிடைக்கிறது.

அதே அங்காடியில் வேலை பார்க்கும் செல்வி (அனன்யா) மேல் அவனுக்கு காதல். அலைபேசியை தேடி அலையும் கார்த்திக். அவனை அலைய விட்டு, அவன் மூலம் தன்னை அவமானப்படுத்தும் மேலாளர் வள்ளிநாயகம் (தம்பி ராமையா) மீது வீண் பழி போட்டு, தன்னை அடித்த பணக்கார வாடிக்கையாளர் (சொர்ணமால்யா) இருவரையும் பழி தீர்த்துக் கொள்கிறான் காசி. அலைபேசிக்கு மின்சக்தி (சார்ஜ்) கொடுக்க போன இடத்தில், கார்த்திக் - மோனிகா அந்தரங்க விஷயங்களை வலைப் பதிவாக்கி விடுகிறான் கடைக்காரன் (மிமிக்ரி சேது) மோனிகா தற்கொலைக்கு துணிகிறாள். கார்த்திக் திருமணம் தடைபடுகிறது.

அலைபேசி கார்த்திக்கிடம் திரும்பியதா? மோனிகா கதி என்ன? என்று 137 நிமிடங்களில் சொல்கிறது படம்.விமலும், பிரசன்னாவும் போட்டிக் போட்டுக் கொணடு நடித்திருக்கின்றனர். சபாஷ். சொற்ப பாடல்களில் சுந்தர இசையை தந்திருக்கிறார் ரகுநந்தன். பாராட்டுக்கள். வெறும் பாறைகளை வைத்து, நவீன சிற்பங்களை வடிவமைத்திருக்கும் கலை இயக்குனர் அனந்திற்கு வளமான எதிர்காலம். பாடல்களில் ரம்மியத்தையும், பரபரப்பு காட்சிகளில் வேகத்தையும் காட்டியிருக்கும் போஜன் கே தினேஷ் வெற்றிப் படிகளில். வைரமுத்துவின் வரிகளில், கார்த்திக் அன்ட் சைந்தவி குரல்களில் ஒலிக்கும், நீலாங்கரையில் தாளம் போட வைக்கும் மெலடி. ஹரிசரண் அன்ட் அனிதா குரல்களில், கிச்சு கிச்சு செம குத்து. பின்னணியில் தெரியும் வடமாநில கோட்டைகளும், மதில்களும், புல்வெளிகளும், சுழன்று ஆடும் வண்ண உடை நடை கோஷ்டியும், கண்களை விரிய வைக்கின்றன.விமலின் நண்பன் சுக்குவாக வரும் சூரி உதிர்க்கும் கடி ஜோக்குகள் பல, புண் சிரிப்பு ரகம். வித்யாசமான ஒரு படம் புலிவால்.

ரசிகன் குரல் : களவாணி ஓவியா, கவர்ச்சியிலே முனைவர் பட்டம் வாங்கிடும் போலிருக்கு பங்காளி!
tamil matrimony_HOME_468x60.gif

Comments