வீரமும் ,ஜில்லாவும் செம லாஸ்! : மாஸ் ஹீரோக்களின் ‘வசூல்’ ரகசியத்தை போட்டுடைத்த தயாரிப்பாளர்!!!

20th of February 2014
சென்னை::விஜய்யின் ஜில்லா ஒரே வாரத்தில் 50 கோடியை வசூல் செய்தது, அஜித்தின் வீரம் ஒரே வாரத்தில் 40 கோடியை வசூல் செய்தது என்றெல்லாம் அந்தப் படங்கள் ரிலீசான போது செய்திகளை பரப்பி விட்டார்கள். இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூட இந்த விஷயத்தை வைத்துக் கொண்டு சோஷியல் நெட்வொர்க் தளங்களில் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள்.ஆனால் உண்மை நிலவரம் வேறுமாதிரியாகத் தான் உள்ளது என்று வெளிப்படையாக விழா மேடையில் போட்டுடைத்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
நேற்று நடைபெற்ற ‘குக்கூ’ ஆடியோ பங்ஷனில் பேசிய அவர், இந்த வருடம் ரிலீசான படங்களின் வசூல் நிலவரத்தை புட்டு புட்டு வைத்தார்.
அவர் பேசும்போது, இந்த வருடம் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பல படங்கள் ரிலீஸ் ஆயிருக்கு. ஆனால் வியாபார ரீதியாக வெற்றிப்பெற்ற படம்னு சொன்னா அது உண்மையிலேயே ‘கோலிசோடா’ படம் ஒண்ணு தான் உண்மையான வெற்றிப்படம்.
வியாபார ரீதியான வெற்றின்னு சொல்லும் போது அது என்ன?ன்னு நீங்க கேட்கலாம். எடுக்கிற டெக்னிஷியன்களுக்கும், எடுக்கிற தயாரிப்பாளர்களுக்கும் அதை வாங்கிய விநியோகஸ்தர்களும் லாபத்தை கொடுக்கும் போது தான் அந்த படத்தை முழுமையான வெற்றிப்படம்னு சொல்ல முடியும். இப்படி எல்லா விதத்திலும் லாபம் அடைந்த ஒரு படம் தான் வெற்றிப்படம்.
இந்த வருஷத்துல அப்படிப்பட்ட ஒரே படம்னு சொன்னா அது ‘கோலிசோடா’ படம் மட்டும் தான். அந்த வெற்றிப்படம் போல இந்த ‘குக்கூ’ படமும் வெற்றி பெற வேண்டும் என்றார்.
அவர் சொன்ன ஹிட் லிஸ்ட்டில் கோடிக்கணக்கில் வசூல் சாதனை செய்தது என்று சொல்லப்பட்ட விஜய்யின் ‘ஜில்லா’ படமும், அஜித்தின் ‘வீரம்’ படமும் இடம்பெறவில்லை. அந்த இரண்டு படங்களுமே செம லாஸ் என்கிற தொணியில் தான் பேசிவிட்டுப் போனார் கேயார்.
அவர்  பேசியதின் அர்த்தம் புரிந்தும் புரியாதது போல அதே மேடையில் தான் அமைதியாக இருந்தார்கள் ‘கோடீஸ்வர’ ஹீரோக்களான கமலும், சூர்யாவும்!
நெஜம் இப்படி இருக்கும் போது எதுக்குங்க ஓவர்………. பில்டப்பு?     
tamil matrimony_HOME_468x60.gif

Comments