3rd of February 2014சென்னை::வாகை சூட வா’ படத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். தொடர்ந்து ‘குட்டிப்புலி’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் தற்போது கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’வுக்கு பின்னணி இசையமைத்து வருகிறார்.
லேட்டஸ்டாக இவரது சகோதரர் அமித் ‘ராஜதந்திரம்’ என்ற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். ‘நடுநிசி நாய்கள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வீராவும், ‘கேடிபில்லா கில்லாடிரங்கா’ புகழ் ரெஜினாவும் இந்தப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.
படத்தின் 70 சதவீத படப்பிடிப்பை சத்தமில்லாமல் நடத்தி முடித்துவிட்டார் அமித். இதில் ஒரு விஷேசம் என்னவென்றால் தனது சகோதரர் இயக்கும் படம் என்றாலும் இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவில்லை. ஜி.வி.பிரகாஷ்தான் அந்த பொறுப்பை ஏற்றிருக்கிறார்..
Comments
Post a Comment