3rd of February 2014
சென்னை::விஜய் டிவியில் கடந்த ஓர் ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் சீசன் 4 போட்டியில் இறுதிச்சுற்றில் அசத்தலாக பாடி 60 லட்சம் மதிப்புள்ள வீட்டினை பரிசாக வென்றார் திவாகர்.இறுதிச்சுற்றில் திவாகர் சரத் சந்தோஷ் சயீத் சுபகான், சரத் சந்தோஷ், பார்வதி மற்றும் சோனியா ஆகியோர் போட்டியிட்டனர்.கடந்த சனிக்கிழமையன்று இரவு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பாடினர்.
திவாகர்சென்னையை சேர்ந்த திவாகர், அந்த அரபிக் கடலோரம் பாடலையும், இரண்டாவது சுற்றில் மாமா, மாப்ளே என்ற பலே பாண்டியா படத்தில் வரும் பாடலையும் பாடினார்.பாராட்டிய ஜானகிஇந்த பாடல் பார்வையாளர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த பின்னணிப் பாடகி ஜானகி, மேடைக்கு எழுந்து போய் பாராட்டினார். 1000 ரூபாய் பரிசு கொடுத்தார். அப்போதே நீதான் வெற்றி பெற்றுள்ளாய் என்று அறிவித்தார்.லட்சம் ஓட்டுக்கள்நடுவர்களின் தீர்ப்புடன் எஸ்.எம்.எஸ் வாக்குகளும் திவாகருக்கே கிடைத்தது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று திவாகர் சூப்பர் சிங்கர் 4 பட்டத்தை வென்றார்.ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடுபட்டம் வென்ற திவாகருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஃப்ளாட் பரிசாக வழங்கப்பட்டது.
சயீத் சுபஹான்2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார் சயீத் சுபஹான். அவருக்கு 1 கிலோ தங்கம் பரிசளிக்கப்பட்டது.சரத் சந்தோஷ்மூன்றாவது இடம் பெற்ற சரத் சந்தோஷ் இரண்டாவது சுற்றில் பாடியே ஓம் சிவோகம் பாடல் ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றது. அவருக்கு ரூ.10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.பார்வதி - சோனியாஇந்த போட்டியில் பட்டம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோனியா, 4 வது இடத்தைத்தான் பெற்றார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. அதேபோல் பார்வதியும் 4வதாக இடம் பெற்று 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.ஆன்டிரியாவும் அழகேசனும்சூப்பர் சிங்கர் 4 வது சீசனில் வயதான போட்டியாளர்
ஒருவர் பங்கேற்றார். அவர் பெயர் அழகேசன். வைல்கார்டு ரவுண்ட் வரை வந்து வெளியேறினார். இறுதிச்சுற்றுப் போட்டியில் ஆன்ரியாவுடன் மேடையில் பாட அழகேசனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அன்று வந்ததும் அதே நிலா என்று பாடி அசத்தினார் அந்த தாத்தா.இமான் இசையில் திவாகர்சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற திவாகருக்கு இசையமைப்பாளர் இமான் பின்னணி பாட வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது...
Comments
Post a Comment