12th of February 2014
சென்னை::விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமல்தான் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார்.
சென்னை::விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமல்தான் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார்.
ரமேஷ் அரவிந்த் ஏற்கனவே கமலை வைத்து ‘சதிலீலாவதி’ படத்தின் ரீமேக்கை கன்னடத்தில் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் தமிழுக்கு வர சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் அரவிந்துக்கு ‘உத்தம வில்லன்’ படத்தை இயக்குவதன் மூலம் தமிழிலும் இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தப்படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக காஜல் அகர்வால், தமன்னா மற்றும் த்ரிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நட்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. காஜல் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியான மாதிரித்தான். த்ரிஷா ஏற்கனவே கமலுடன் ‘மன்மதன் அம்பு’ படத்தில் நடித்தவர். அதனால் அவரும் ஓகே சொல்லிவிடக்கூடும். அப்புறம் கமல் படம் என்றால் தமன்னா மட்டும் மறுத்துவிடவா போகிறார்.?
இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க இருக்கும் இந்தப்படத்தின் வசனங்களை கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவான கிரேசி மோகன் எழுதுகிறார். படப்பிடிப்பு வரும் பிப்-24ஆம் தேதி பூஜையுடன் துவங்க இருக்கிறது. அன்றுதான் கதாநாயகிகள் பற்றிய அறிவிப்பும் முறைப்படி வெளியாகும் என தெரிகிறது.
Comments
Post a Comment