1st of February 2014சென்னை::கடல்’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலைகளில் பிசியாகி விட்டார் மணிரத்னம். சமீபத்திய தனது படங்கள் பாக்ஸ் ஆஃபீசில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அடுத்து பெரிய ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மணிரத்னம். இதனால் அடுத்த படத்திற்காக ஒரு கமர்ஷியல் கதையை பக்காவாக உருவாக்கியிருக்கிறாராம் மணிரத்னம்! இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி ரசிகர்களையும் கவரும் விதமாக உருவாக்கப்படவிருப்பதால் இம்மூன்று மொழி கலைஞர்களையும் நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டோலிவுட்டின் பிரபல நடிகர்களான நாகார்ஜுனா, மகேஷ் பாபு மணி இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் நாகார்ஜுனா ஏற்கெனவெ மணிரத்னம் இயக்கிய ‘இதயத்தை திருடாதே’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னத்தின் பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய்! இவரிடமும், அது மாதிரி ஸ்ருதி ஹாசனிடமும் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்காக மணிரத்னம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது!

அநேகமாக இவர்கள் இருவரும் மணி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார்கள் என்றே கோலிவுடில் கூறப்படுகிறது. இவர்களை தவிர மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை வைத்து முதலில் இயக்க திட்டமிட்டிருந்த மணிரத்னம், அந்த கதையை தள்ளி வைத்துதான் இப்போது வேறு கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் நாகார்ஜுனா, மகேஷ் பாபுவுடன் ஃபஹத் ஃபாசிலையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆக, மணிரத்னம் அடுத்து இயக்கும் படம் ஒரு மல்டிஸ்டார் படமாக உருவாக இருக்கிறது. ::
ஆக, மணிரத்னம் அடுத்து இயக்கும் படம் ஒரு மல்டிஸ்டார் படமாக உருவாக இருக்கிறது. ::
Comments
Post a Comment