3rd of February 2014
சென்னை::வீரம்' வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு பின்னர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சென்னை::வீரம்' வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு பின்னர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் கே.வி. ஆனந்தின் படத்துக்கு முன்பதாக ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளராம்.
அஜித் - ஷங்கர் இணையவுள்ள படத்தின் கதையை முதலில் ரஜினியிடம் கூறியிருக்கிறார் ஷங்கர். கதை கேட்ட ரஜினி ' நன்றாக இருக்கிறது. அஜித் நடித்தால் நன்றாக இருக்கும்.' என்று சொல்லியிருக்கிறார்.
ரஜினி சொன்னதால் அஜித் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம்.
இவ்வருடத்தின் இறுதியில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் அஜித் - ஷங்கர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14ஆம் திகதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இரு முறை ஷங்கரின் படத்தில் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் அது நடைபெறாமல் போயுள்ளது. ஆனால் இந்த முறை கண்டிப்பாக அஜித் - ஷங்கர் கூட்டணி இணைந்துவிடுவார்கள் எனக் கூறப்படுகின்றது..
Comments
Post a Comment