வரலட்சுமி வாங்கிய வரம்..!


13th of February 2014
சென்னை::சரத்குமார் மகள் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்தது ‘போடாபோடி’ என ஒரே ஒரு படம் தான். விஷாலுடன் நடித்த ‘மதகஜராஜா’ இன்னும் ரிலீஸாக முடியாமல் பெண்டிங்கில் இருக்கிறது. வரூவுக்கு நன்றாக நடனமாடவும் தெரிகிறது.. அதேசமயம் நடிக்கவும் வருகிறது. ஆனால் வாய்ப்புகள் தான் தள்ளியே நிற்கின்றன.
 
ஆனால் இப்போது வரம் கிடைத்த மாதிரி வரலட்சுமியைத் தேடி வந்திருக்கிறது ஒரு ஜாக்பாட். ஆம். பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிப்பார் என்று தெரிகிறது. கரகாட்டம் சம்பந்தமான கதையை தயார் செய்துவரும் பாலா, அதில் நடனமாடத் தெரிந்த ஒரு நடிகை கிடைத்தால் தான், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறார்.
 
அதற்கேற்ற மாதிரி நடனம் ஆடத்தெரிந்த வரலட்சுமியிடம் இந்தக்கதையையும் அவரது கேரக்டரையும் பற்றிச் சொல்லவே துள்ளிக்குதித்து விட்டாராம் வரலட்சுமி. இதற்குமுன்பே ஸ்ரேயா, ஸ்ராவந்தி ஆகிய நடிகைகளையும் வைத்து டெஸ்ட் ஷூட் செய்து பார்த்திருக்கிறார் பாலா.. ஹூம்.. யாருக்கு அடிக்கப்போகிறதோ யோகம்..?
tamil matrimony_HOME_468x60.gif

Comments