17th of February 2014
சென்னை::திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த ஆனந்த்பாபுவை தேடிபிடித்து ‘ஜமாய்‘ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தார் இயக்குனர் ஜெயகுமார். இதுபற்றி அவர் கூறியதாவது:1984ம் ஆண்டு நான் இயக்கிய ‘பாடும் வானம்பாடி‘ என்ற படத்தில் ஆனந்த்பாபு ஹீரோவாக நடித்தார். சுமார் 28 வருடங்களுக்கு பிறகு அவரை நான் இயக்கும் ‘ஜமாய்‘ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க தேடினேன். அவர் இருக்கும் இடத்தை தேடிபிடித்து கதை சொன்னபோது ஒப்புக்கொண்டார்.

கல்லூரி காதல் கதையாக இப்படம் உருவாகிறது. நவீன், உதய், வைஜெயந்தி, நிமிஷா நடிக்கின்றனர். இதில் இசை பயிற்சி ஆசிரியராக ஆனந்த்பாபு நடிக்கிறார். ஆரம்பகாலத்தில் என்னிடம் எப்படி பழகினாரோ அதேபோல் பழகியதுடன் சொன்ன நேரத்துக்கு வந்து நடித்து கொடுத்தார்.
இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள். தினா இசை. கவிஞர் வாலி மொத்த பாடல்களும் எழுத ஒப்புக்கொண்டார். 5 பாடல்கள் எழுதி தந்தார். பின்னர் அவர் இறந்ததால் கவிஞர் நா.முத்துகுமாரிடம் அணுகி பாடல் எழுத கேட்டேன். உடனடியாக ஒப்புக்கொண்டு 2 மணி நேரத்தில் பாடல்கள் எழுதி கொடுத்தார். எம்.டி.குமார் ஒளிப்பதிவு. இதன் ஷூட்டிங் முடிந்தது.::
Comments
Post a Comment