6th of February 2014
சென்னை::செகண்ட் இன்னிங்சில் அஜீத்தின் வீரம் படம் தமன்னாவுக்கு என்ட்ரி கொடுத்தது. அதனால் நயன்தாரா போன்று இவரும் அடுத்து ஒரு மெகா ரவுண்ட் வருவார் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, அஜீத்தே தமன்னாவுக்கு சான்ஸ் கொடுத்திருக்கும்போது நாமும் கொடுத்தாலென்ன என்ற முடிவுக்கு மேலும் சில மேல்தட்டு ஹீரோக்களும் வந்திருப்பதால், சத்தமில்லாமல் சில புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார் தமன்னா.

இந்த
நேரத்தில், தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கும் படத்திலும்,
அடுத்தபடியாக, மகேஷ்பாபு நடிக்கும் ஆகடு என்ற படத்தில் தற்போது
நடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே தெலுங்கில் ஒரு பெரும் கலக்கு கலக்கி
ஆந்திர ரசிகர்களுக்கு கவர்ச்சி அட்டாக் கொடுத்த தமன்னா, இந்த முறை,
இன்னும் அதிரடி அட்டாக் கொடுக்கும் வகையில், கிளாமர் காஸ்டியூமில் நடித்து
டோட்டல் யூனிட்டையே கலங்கடித்துக்கொண்டிருக்கிறாராம்.
இந்த சேதி
ஆந்திராவில் பரவியதையடுத்து, தமன்னாவுடன் ஏற்கனவே நடித்த ஹீரோக்களே அடுத்த
ரவுண்ட்டை அவருடன் சேர்ந்து அமர்க்களமாக ஆரம்பிக்க வட்டம் போடத் தொடங்கி
விட்டார்களாம். இதனால் ஏக குஷியில் இருக்கும் தமன்னா, சமீபகாலமாக
மும்பையில் முகாமிட்டபடி ஐதராபாத்துக்கு விஜயம் செய்து கொண்டிருந்தவர்,
இப்போது ஆந்திராவிலேயே செட்டிலாகி விட்டார். கூடவே தனது படக்கூலியையும்
தாறுமாறாக உயர்த்தி விட்டுள்ளாராம்...
Comments
Post a Comment