மிரட்டும் தொழில்நுட்பத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’

7th of February 2014
சென்னை::காதலர் தினத்தன்று வெளியாக இருக்கும் உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும் ரசிகர்களை அசத்த இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தப்படம் ஆரோ 11.1 மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) எனும் புதிய ஒலித்தரத்தில் வெளியாகிறது.
 
இதன் மூலம், ஒரு காட்சியின் நிஜ ஒலித்திறனை, அதன் தன்மை மாறாமல் உணரமுடியும். இதற்கு முன்பு சிவாஜி 3டி, தலைவா, பீட்சா-2 வில்லா, பிரியாணி ஆகிய படங்கள் மட்டுமே இந்த டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளன.
 
அதேபோல விரைவில் வெளியாக இருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தில் கமல் ஆரோ 11.1 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாகவும் அது படத்தில் பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் படத்தின் சில காட்சிகளை பார்த்தவர்கள் கூறியுள்ளார்கள். அதே உணர்வை ‘இது கதிர்வேலன் காதல்’ படமும் ஏற்படுத்தும் என தாராளமாக நம்பலாம்..   
tamil matrimony_HOME_468x60.gif

Comments