ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ரெடியான விஜய் சேதுபதி!!!

27th of February 2014
சென்னை::சத்தமே இல்லாமல் தொடர் வெற்றிகளைக் கொடுத்த தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி.

ஹீரோ என்ற இமேஜைப் பார்க்காமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளைத் தேர்வு செய்து, வெற்றி பெறும் விஜய் சேதுபதி, அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. மேலும், சொந்தமாகவும் படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில், தனது நண்பர் ஒருவருக்காக, அவர் இயக்கும் படம் ஒன்றில், ஒரு பாடலுக்கு நடனம் ஆட விஜய் சேதுபதி ரெடியாகிவிட்டார். விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஆடுவதற்காக தற்போது படக்குழுவினர் நடிகையை தேடி வருகிறார்களாம்.
tamil matrimony_HOME_468x60.gif
  

Comments