10th of February 2014சென்னை::சமீபத்தில் ‘தெகிடி’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சீனுராமசாமி, தனது நீண்ட நாள் வருத்தம் ஒன்றை வெளியிட்டார். “எம்.எஸ்.விஸ்வநாதன் எம்.ஜி.ஆர் படங்களுக்கு இசையமைத்து வந்த அதே காலகட்டத்தில் சின்ன படங்களுக்கும் இசையமைத்தார். அதே மாதிரிதான் இசைஞானி இளையராஜாவும் பெரிய, சிறிய படங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரி மதித்தார்கள்.
ஆனால் இன்று ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் இருவரும் பெரிய படங்களுக்குத்தான் இசையமைப்பார்கள் என்கிற சூழ்நிலைதான் இருக்கிறது. சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அவர்களை நெருங்க முடியவில்லை. காரணம் அவர்கள் பட்ஜெட்டை விட இவர்கள் இருவரின் ஊதியம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் இருவரும் சின்ன பட்ஜெட்டில் தயாராகும் நல்ல படங்களுக்கும்
இசையமைத்தால் அந்தப்படங்களுக்கும் ரசிகர்களிடம் ஒரு வெளிச்சம் கிடைக்கும். இதை அவர்கள் யோசிக்க வேண்டும்” என்று பேசினார் சீனு ராமசாமி. ரஹ்மான், ஹாரிஸ் இருவரும் இதற்கு ஆவண செய்வார்களா..?::
Comments
Post a Comment