இந்தியில் நடிப்பதில்லை என்பதில் உறுதி: நயன்தாரா!!!

8th of February 2014
சென்னை::தொடர்ந்து 8 ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டு சம்பளத்தையும் கோடி கணக்கில் உயர்த்திவிட்ட நயன்தாராவுக்கு ஏனோ இந்திப் படங்கள் மீது ஆர்வம் இல்லை. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு ஷாருக்கான் ஒரு கோடி தர முன்வந்தும் நோ சொன்னவர். இப்போதும் இந்தியில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனக்கு எப்பவுமே தென்னிந்திய மொழி படங்கள்ல நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு. ஒரு மொழியில இல்லை நான்கு மொழிகள்ல நடிக்கிறேன். தென்னிந்திய சினிமா என்னோட சொந்த வீடு மாதிரி. இங்கு நடிக்கிறதே எனக்கு திருப்தியா இருக்கு. இந்தியில நடிக்கணுங்ற ஆசை இப்போதைக்கு இல்லை.

தமிழில் பெரிய ரீ-என்ட்ரிக்கா ராஜா ராணியில நடிக்கல. கதை பிடிச்சிருந்து நடிச்சேன். அதுக்கு கிடைச்ச வரவேற்பை பார்த்து வியந்துட்டேன். இந்த மாதிரி கேரக்டர்லதான் நடிக்கணும்னு எந்த கட்டுப்பாடும் வச்சிக்கிறதில்ல. கதையும், கேரக்டரும் பிடிச்சிருந்தா நடிக்கிறேன். அவ்வளவுதான் கூட யார் நடிக்கிறாங்கன்னுகூட பார்க்குறதில்ல. கதையை ஓகே பண்ணிட்டேன்னா அப்புறம் டைரக்டர் சொல்றதத்தான் கேட்பேன். நான் எப்பவுமே டைரக்டர் ஆர்ட்டிஸ்டா இருக்கத்தான் விரும்புறேன் என்கிறார் நயன்தாரா.
tamil matrimony_HOME_468x60.gif

Comments