3rd of February 2014
சென்னை::கிளாஸ்கோ: பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் வழங்கியது ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து.தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழ்கிறார் ரஹ்மான்

குறிப்பாக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதன் மூலம் அவரது புகழ் சர்வதேச அரங்கில் பரவியுள்ளது.இசைத் துறையில் ரஹ்மானின் சாதனைகளைப் போற்றும் வகையில் அவருக்கு ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் நடந்த இந்த விழாவுக்கு, தனது கேஎம் இசைப் பள்ளி மாணவர்களுடன் சென்று கவுரவத்தை ஏற்றுக் கொண்டார் ஏஆர் ரஹ்மான்.
1845லிருந்து சர்வதேச அளவில் இசை, நடனம், நடிப்பு என கலைத் துறை கல்வியை சிறப்பாக எடுத்துச் செல்கிறது இந்த ஸ்காட்லாந்து நிறுவனம்.இந்த விருது தனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருவதாக உள்ளது என ரஹ்மான் தெரிவித்துள்ளார்...
Comments
Post a Comment