யுவன் ஒலி, வைரமுத்து மொழி!!!

5th of February 2014
சென்னை::இடம் பொருள் ஏவல்’ படத்தில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் முதன் முறையாக இணைந்து பணிபுரிய இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த புதிய கூட்டணியை சேர்த்து வைத்த பெருமை, இரு ‘சாமி’களுக்கு உண்டு என்று சிலாகிக்கிறார் வைரமுத்து.
 
அந்த ‘சாமி’கள் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி, இயக்குனர் சீனு ராமசாமி.
யுவன் இசையில் பாடல் எழுதுவதைப் பற்றி வைரமுத்து கூறியதாவது,
 
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் யுவன் என்னிடம் ‘எனக்கு பாட்டு எழுத முடியாதா அங்கிள்’ என்று கேட்டார். எனக்கும் ஆசைதான். யுவனின் புதுப்புது ஒலியோடு, என்னுடைய முது மொழியும் சேர்ந்தால் புது இசை வருமே என்ற ஆவல் எனக்கும் இருந்தது.
 
ஆனால், அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். அதனால், அந்த சந்தர்ப்பத்தை அப்போது தட்டிக் கழித்தேன்.
 
இன்று , யுவன் அசைக்க முடியாத உயரத்திற்குச் சென்று விட்டார். இப்போது நேரம் எங்களுக்காக கனிந்ததாக நினைத்தேன். ‘இடம் பொருள் ஏவல்’ மூன்றும் ஒரு சேர கூடி வந்தது போலவே நினைத்து இந்த படத்தில் இணைந்துவிட்டேன்,” என்றார்.
 
யுவன் கூறுகையில், “பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்திற்கே அவரை பாட்டு எழுத கேட்டேன். எனக்கு நெருக்கமானவங்களே ஏதாவது பிரச்சனை வந்துடப் போகுதுன்னு விசாரிக்கிறாங்க. சினிமா, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுமே தனித்தனியா நான் பாக்கறது இல்லை.
 
என் அம்மாகிட்ட இருந்து நான் கத்துக்கிட்டது அன்பு செலுத்தறது மட்டும்தான். எதையும் அன்பால வெளிப்படுத்தினால் பிரச்சனை இருக்காது. அதைத்தான் நான் இப்போ செய்யறேன், ” என்றார்.
மீண்டும் 80களின் அந்த இனிய மெய் மறக்க வைக்கும் இசை ஒலிக்கட்டும்…          
tamil matrimony_HOME_468x60.gif

Comments