1st of February 2014
சென்னை::எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா-விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும்
'புறம்போக்கு' படத்தில் ஷான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கார்த்திகா
நாயகியாக நடிக்கிறார். இந்த குழுவினர் முதல் கட்ட படப்பிடிப்பை குலு
மணாலியில் முடித்துவிட்டு உற்சாகத்தோடு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையில், இதில்
நாயகியாக நடிக்கும் கார்த்திகா படு குஷியாக இருக்கிறார். காரணம் இந்த
படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவமாம். இது குறித்து
கூறிய கார்த்திகா, "குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக
கடந்தது. மறக்க முடியாததாக இருந்தது. இந்த படத்தில் எனது கதாபாத்திரம்
மிகவும் கரடு முரடானது. ஆக்ஷன் காட்சிகளில் சோபிக்க இடம் உள்ள
கதாபாத்திரம்.
இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம்
பிரசித்தி பெற்ற வீராங்கனை லாரா க்ராப்டை சார்ந்து இருக்கும். இதை தவிர
நான் ஆடியிருக்கும் டேப் டான்ஸ் எனக்கு நடனத்திலும் சோபிக்க கூடியவர் என்ற
பெயரை பெற்று தரும். என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்பளித்த
இயக்குநர் ஜனநாதனுக்கு என் உள மார்ந்த நன்றிகள். அவர் என்
பார்வையில் ஒரு சரித்திர பேராசிரியராக தோன்றுகிறார். அவரது உலக அறிவு அபரிதமானது, வியப்புக்குரியது." என்றார். ::
Comments
Post a Comment