கோலிசோடாவுக்கு சம்பள பாக்கி: விஜய் மில்டன், டாக்டர் சீனிவாசன் மோதல்!!!


19th of February 2014
சென்னை::ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் தயாரித்து, இயக்கிய படம் கோலிசோடா. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கோடிக் கணக்கில் லாபத்தை கொட்டிக்கொண்டிருக்கும் படம். இந்தப் படத்தில் நடிகர் டாக்டர்.சீனிவாசன், ஒரு சிறிய கேரக்டரில் அதாவது நடிகராகவே நடித்திருந்தார். அப்படி நடித்ததற்கு உரிய சம்பளத்தை தராமல் ஏமாற்றுவதாக அவர் புகார் கூறினார்.

"கோலிசோடாவில் நடிக்க 6 நாள் கால்ஷீட் கேட்டார்கள். அதற்கு ஒரு சம்பளம் பேசி அதில் ஒரு சிறிய பகுதியை அட்வான்சாக கொடுத்தார்கள். 6 நாள் வேலையை 3 நாளில் முடித்துக் கொடுத்து அவர்களுக்கு செலவை மிச்சப்படுத்தினேன். ஆனால் அவர்கள் எனக்கு பேசிய படி சம்பளம் தரவில்லை. கேட்டால் தரமுடியாது முடிந்ததை செய்துகொள் என்கிறார்கள். உழைப்புக்கான கூலியை தரமறுப்பது எந்த விதத்தில் நியாயம்" என்று கேட்டிருந்தார் சீனிவாசன்.

இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்.டி.விஜய்மில்டன் கூறியிருப்பதாவது: கோலிசோடா படத்துக்கு அவரிடம் 6 நாட்கள் கால்ஷீட் கேட்டிருந்தோம். அதற்காக ஒரு சம்பளம் பேசி பாதி தொகையை அட்வான்சாக கொடுத்தோம். ஆனால் அவர் மூன்று நாட்கள்தான் நடித்துக் கொடுத்தார். மீதி முன்று நாட்கள் படப்பிடிப்புக்கு வரவில்லை. இதனால் எங்களுக்குத்தான் நஷ்டம் ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. வேலை செய்யாத மூன்று நாட்களுக்கு சம்பளம் கேட்டால் எப்படி கொடுக்க முடியும். அவர் முறைப்படி நடிகர் சங்கத்தில் புகார் செய்யட்டும் அங்கு நாங்கள் விளக்கம் தருகிறோம். என்கிறார்...      
tamil matrimony_HOME_468x60.gif

Comments