ஆஹா கல்யாணம்' படப்பிடிப்பு முடிவடைந்தது!!!

5th of February 2014சென்னை::இளைஞர்களை பெருமளவில் கவர்ந்து இருக்கும் 'ஆஹா கல்யாணம் ' படத்தின்  கடைசி நாள் படப்பிடிப்பு சென்னையில் இன்று முடிவடைந்தது.

படத்தின் நாயகன் நானி படத்தை பற்றி பேசும் போது "இந்த படமும் படப்பிடிப்பு நடந்த அந்த நாட்களும் என்னால் மறக்கவே முடியாதது . நாயகி வாணியுடன் பணியாற்றியதும் ஒரு கல்யாணம் போலவே இனிமையான அனுபவம். அவரது உற்சாகமும் , அதில் அடங்கிய சக்தியும் அவருக்கு மிக பெரிய பலமாகும். உக்கிரமான வெயில் நாட்களிலும் , படத்தின் வண்ணத்தை  கூட்டும் வகையில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஒளி விளக்குகளின் மத்தியில் படமாக்க பட்ட போதும் , கடுமையான நடன அசைவுகளின் போதும் சற்றும் களைப்பு அடையாமல் அவர் பணியாற்றியது வியப்புக்குரியது.

சமீபத்தில்  அவருக்கு கிடைத்த பிலிம் பேர்  பத்திரிகையின் சிறந்த புது முகம் என்ற பெயரும் அவருக்கு தமிழ் ரசிகர்கள் இடையே நீங்கா  இடம் கிடைக்கும் என்பது நிதர்சமான உண்மை .  இயக்குனர் கோகுல் கிருஷ்ணா , எனக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். தனக்கு  என்ன வேண்டுமோ , அது கிடைக்கும் வரை அயராத அவரது உழைப்பும் நேர்த்தியும் அவரை மிக பெரிய இயக்குனராக அடையாளம் காட்டுகிறது . ' ஆஹா கல்யாணம் ' படத்தை பற்றி பேசும் போது  படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ்  பற்றி பேசாமல் முடிக்க முடியாது .நான்  யாஷ் ராஜ் அவர்களின் காதல் படங்களை பார்த்து வளர்ந்தவன் . இன்று அந்த நிறுவனித்தில்   ஒரு படத்தில் கதாநயாகனாக நடிக்கிறேன் என்றால் அது நான் செய்த பாக்கியமே .

நான் இந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டது ஏராளம் . நடிக நடிகையர் தேர்வாகட்டும் , படப்பிடிப்பு நடத்தும் நேர்த்தியும் , திட்டமிடுதலும், படத்தை பெரிய அளவுக்கு விளம்பரம் செய்யும் செயல் திட்டமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது." என்று தன நினைவுகளை சொல்லி முடித்தார் இளம் பெண்களை பெருமளவில் கவர்ந்து உள்ள நானி ......           
காதலர்களுக்கு உகந்த மாதமான பிப்ரவரி மாதம் 'ஆஹா கல்யாணம்' வெளியாகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments