18th of February 2014
சென்னை:: அன்னயும் ரசூலும்’ படத்துக்கு பிறகு மலையாளத்தில் நடிக்க, வாய்ப்புகள் தேடி வந்தும் கூட நடிக்க மறுத்து வந்தார் ஆண்ட்ரியா.. காரணம் அந்தப்படத்தில் ஜோடியாக நடித்த பஹத் ஃபாஸில் அவர் மீது வீசிய காதல் அம்பு தான். அதனால் கேரளாவே வேண்டாம் என தமிழிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இப்போதுதான் பஹத் ஃபாஸில், நஸ்ரியாவிடம் சரண்டர் ஆகிவிட்டாரே.., அதனால் இனி தைரியமாக மலையாளக் கரைக்கு போகலாம் என நினைத்தாரோ என்னவோ, கே.எஸ்.உன்னி என்பவர் இயக்கும் மலையாளப் படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ஆண்ட்ரியா.
இது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் இன்னொரு ஹீரோயினாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்தார்கள். முதலில் ஒத்துக்கொண்ட ஸ்ரேயா, தன்னைவிட ஆண்ட்ரியாவுக்குத்தான் அதிக வாய்ப்பு உள்ள கேரக்டர் என்பது தெரிய வந்ததால் நான் விலகிக்கொள்கிறேன் என கிளம்பிவிட்டார். இப்போது அவருக்குப் பதிலாக வேறு ஒரு ஹீரோயினை தேடி வருகிறார் படத்தின் இயக்குனர் உன்னி.
Comments
Post a Comment