5th of February 2014சென்னை::கோடம்பாக்கத்தில் பிரபலமாகி, மும்பையில் குடியேறிய நடிகை அசின், தமிழ்ப்
படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்தது. இது ஒரு
காலத்தில், தற்போது "தன்னை யாரும் கண்டுகொள்வதில்லை" என்று அசின்
புலம்பும் நிலையில்தான் அவருடைய பட வாய்ப்புகள் உள்ளது.
என்னதான் பட வாய்ப்புகள் குறைந்தாலும், விளம்பர ஏரியாவில் அசினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி, சமீபத்தில் அமெரிக்க அழகு சாதனா பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அசினை, இந்தியாவுக்கான விளம்பர தூதுவராக நியமித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்த நிறுவன விழாவில், அழகு சாதனப் பொருட்களை அறிமுகம் செய்து வைத்த அசின், விளம்பர தூதுவராகவும் பதவி ஏற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், " ஒரு படத்தில் நடிக்க ஏற்படும் கால அவகாசத்தைவிட அந்த படத்தின் தனித்தன்மையையே நான் அதிகம் விரும்புகிறேன். அதேபோல், சிறந்த கதையாக இருந்தால் யாருடனும் நடிக்க தயாராக இருக்கிறேன்." என்று தெரிவித்தார்..

Comments
Post a Comment