7th of February 2014சென்னை::விஸ்வரூபம்’, ‘தலைவா’ படங்களை ஒருவிதமான அரசியல் ஆட்டுவித்தது என்றால் ‘இது கதிர்வேலன் காதல்’ படமோ வேறுவிதமான அரசியலில் சிக்கிக்கொண்டுள்ளது. சமீபத்தில் இந்தப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு தணிக்கையில் ‘யு’ சான்றிதழும் பெற்றது.
ஆனால் இந்தப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ரிவைசிங் கமிட்டியில் புகார் செய்துள்ளார் உதயநிதி. உதயநிதி இப்படிப்பட்ட பிரச்சனையை சந்திப்பது நான்காவது முறை. ஏற்கனவே அவர் தயாரித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘நீர்ப்பறவை’, ‘வணக்கம் சென்னை’ ஆகிய படங்களுக்கும் இதேபோல் கேளிக்கைவரி விலக்கு அளிக்க மறுக்கப்பட்டது.
இந்த பிரச்சனை சம்பந்தமாக தனது முந்தைய தயாரிப்பான ‘வணக்கம் சென்னை’ படத்திற்காக தயாரிப்பாளர் சங்கத்திலும் ஃபிலிம் சேம்பரிலும் உதயநிதி முறையிட்டிருந்தும் கூட, அரசியல் காரணங்களால் இன்னும் இது தொடர்கதையாக இருப்பது தற்போது திரையுலகில் சர்ச்சையை எழுப்பியுள்ளது..::
Comments
Post a Comment