போலிகள் மீது சட்டப்படி நடவடிக்கை - சிம்பு!!!

8th of February 2014
சென்னை::டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் திரைப்பட நடிகர், நடிகைகள் அக்கவுண்ட் வைத்துள்ளார்கள். மேலும், அக்கவுண்ட் வைத்திராத சில நடிகர்களின் பெயரில், சிலர் போலியான அக்கவுண்ட்களை உருவாக்கி, தவறான செய்திகளை வெளியிடுகின்றனர்.

இதுபோன்ற பிரச்சனைகளில் நடிகை திரிஷா, நடிகர் சூரி உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது இந்த வரிசையில் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார்,

ஆம், சிம்பு பெயரில் போலியான சில அக்கவுண்ட்களை உருவாக்கி, சிலர் செய்திகள் வெளியிடுகின்றார்களாம். இதனை கண்டித்துள்ள சிம்பு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து நடிகர் சிம்பு கூறுகையில், "நான் டுவிட்டரில் இருக்கிறேன். ஐ அம் எஸ்டிஆர் என்ற பெயரில் என் அதிகாரபூர்வ கணக்கு உள்ளது. ஆனால் என் பெயரில் சில போலி டுவிட்டர் அக்கவுண்ட்களும் இருக்கின்றன. ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் இந்த போலியை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் எனது அதிகாரபூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் உடனுக்குடன் போட்டு வருகிறேன். என் பெயரில் உள்ள போலி அக்கவுண்ட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்தார்.
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments