திலீப் ஜோடியாக லட்சுமிமேனன்..!!!!

16th of February 2014
சென்னை::மிழில் எல்லா முன்னணி இளம் ஹீரோக்களுடனும் நடிக்கிறார். பிஸியாகத்தான் இருக்கிறார் நம்ம லட்சுமி மேனன்.. ஆனால் சொந்த ஊரான கேரளாவிலும் அவர் நடிக்கவேண்டும் என அங்கிருக்கும் ரசிகர்கள் எதிர்பார்க்கமாட்டார்களா..? அவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் இல்லையா..?
 
ஆரம்பத்தில் இரண்டு மலையாளப் படங்களில் நடித்ததோடு சரி..அதற்கப்புறம் தமிழ் மட்டும் தான்.. ஆனால் இப்போது கொஞ்சம் மனமிறங்கி மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் லட்சுமி மேனன்.. பின்னே அழைப்பு வந்திருப்பது ஆக்‌ஷன் படங்களின் சூத்திரதாரியான டைரக்டர் ஜோஷியிடமிருந்து அல்லவா..? அப்புறம் எப்படி மறுக்க முடியும்..?
 
முன்பு தமிழைவிட்டு மலையாளப் பக்கம் வரமாட்டேன் என இதேபோலத்தான் பிடிவாதம் பிடித்து நின்றார் அமலாபால்.. ஆனால் நடந்த்து என்ன..? ஜோஷி படம் என்றதும் கொஞ்சமும் தாமதிக்காமல் சென்று மோகன்லாலுடன் சேர்ந்து ‘ரன் பேபி ரன்’ படத்தில் நடித்துவிட்டு வந்தாரே.. படமும் சூப்பர்ஹிட்டாச்சே.!. அந்த ராசியில் தானே இப்போது திரும்பவும் ஜோஷி டைரக்‌ஷனில் மோகன்லாலுடன் ‘லைலா ஓ லைலா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
 
அதேபோலத்தான் இப்போது லட்சுமி மேனனுக்கும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது. நம்ம ஜனப்ரிய நாயகன் திலீப் தான் கதாநாயகன். திலீப்புக்கும் ஜோஷிக்கும் பிரிக்க முடியாத பந்தம் ஒன்று உண்டு. அதுதான் இவர்கள் இருவரையும் இப்போது ஏழாவது முறையாக இணைத்துள்ளது.. ஜோஷியை நம்பினோர் கைவிடப்படார்.. இது எழுதப்படாத மலையாள பொன்மொழி..    

tamil matrimony_HOME_468x60.gif

Comments