15th of February 2014சென்னை::தற்போதுள்ள திரைத்துறையினர் சினிமாவை முன்னுக்கு எடுத்துச் செல்வதற்கு
மாறாக, பின்னுக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்று பழம்பெரும் இயக்குநரும்,
தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் ஆதங்கப்பட்டு நிகழ்ச்சி ஒன்றில்
பேசினார்.
கிளாசிக் சினி சர்க்யூட் என்ற நிறுவனம் சார்பில் எம்.ஜெயகுமார் எழுதி, இயக்கி தயாரிக்கும் படம் 'ஜமாய்'. சுமார் 28 வருடங்களுக்கு முன்பு, தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் கே.ஆர் தயாரிப்பில், ஆனந்த்பாபு நடிப்பில் வெளியாகி 300 நாட்களுக்கு மேல் ஓடி, பெரும் வசூல் ஈட்டிய 'பாடும்வானம்பாடி' என்ற படத்தை இயக்கியவர் தான் இந்த ஜெயகுமார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஜமாய்' என்ற படத்தின் மூலம் ஜெயகுமார் ரீஎண்ட்ரி ஆகியிருக்கிறார். இதில் நவீன், உதய் ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். வைஜெயந்தி, நிவிஷா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆனந்த்பாபு, ராதாரவி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன்,ராஜப்பா,மதன்பாப்,சீதா,சங்கீதா பாலன்,மாஸ்டர் மகேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
எம்.டி.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தினா இசையமைத்துள்ளார். வாலி மற்றும் நா.முத்துகுமார் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் முக்தா சீனிவாசன், கே.ஆர், டி.சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய முக்தா சீனிவாசன், "இந்த படத்தை இயக்கியுள்ள ஜெயகுமார் நான் இயக்கிய 'அந்தமான் காதலி' உள்ளிட்ட மூன்று படங்களில் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அந்தமான் காதலி படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்ற போது சரியாக உணவு கிடைக்காமல் என்னிட பட்டினியாக இருந்து பணியாற்றிவர் இந்த ஜெயகுமார்.
ஜமாய் படத்தின் பாடல்களை இங்கு பார்த்தும். படம் வெற்றிப் பெறுவதற்கு உரிய அனைத்து கமர்ஷியல் விஷயங்களும் படத்தில் உள்ளன. அதனால், இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஆனால், நான் இங்கு ஒன்று சொல்லிகொல்ல ஆசைப்படுகிறேன். இன்றைய தலைமுறையினர் சினிமாவை முன்னோக்கி எடுத்துச் எல்கிறார்களா அல்லது பின்னோக்கிச் எடுத்துச் செல்கிறார்களா என்று பார்த்தால், பின்னோக்கி தான் எடுத்துச் செல்கிறார்கள். ஒளிப்பதிவு மற்றும் கம்யூட்டர் கிராபிக்ஸில் நாம் முன்னேறிவிட்டோம். ஆனால், கதை, அதை கொடுக்கும் விதத்தில் நாம், சினிமாவை பின்னோக்கி தான் எடுத்துசெல்கிறோம்." என்று பேசினார்.::

Comments
Post a Comment