பாலா படத்தில் சசிகுமார் ஜோடியாக ஸ்ரேயா ?!!!

 
6th of February 2014
சென்னை::பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா அடுத்து சசிகுமாரை நாயகனாக வைத்து இயக்கும் படத்தில் , ஸ்ரேயா நாயகியாக நடிக்கலாம் எனத் தெரிகிறது.

தமிழில் 2011ம் ஆண்டு வெளிவந்த ‘ரௌத்திரம்’ படத்திற்குப் பிறகு ஸ்ரேயா எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.
 
இதே நிலைமைதான் தெலுங்கிலும். ஒரு காலத்தில் அங்கும் முன்னணி நடிகையாக இருந்தவர்தான் ஸ்ரேயா. தற்போதுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகார்ஜுனா ஜோடியாக நடித்துள்ள ‘மனம்’ படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது.

பாலா இயக்கும் படம் கரகாட்டத்தை மையமாகக் கொண்ட படம் என்பதால் நடனம் நன்றாக ஆடத் தெரிந்த நடிகை தேவைப்படுகிறதாம்.

ஸ்ரேயா ஒரு சிறந்த ‘கதக்’ டான்சர். அதனால், அவரை படத்தில் நாயகியாக்குவதால் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறார்களாம்.

ஆக, ஸ்ரேயாவோட செகன்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாகப் போகுது.…..       
tamil matrimony_HOME_468x60.gif

Comments