11th of February 2014
சென்னை::துப்பாக்கி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முருகதாஸ் - விஜய் கூட்டணி மீண்டும் புதிய படமொன்றுக்காக இணைந்துள்ளது.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்கள் கல்கத்தாவில் இம்மாதம் ஆரம்பித்தில் ஆரம்பமாகி வேகமாக நடைபெற்று வருகின்றது.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்கள் கல்கத்தாவில் இம்மாதம் ஆரம்பித்தில் ஆரம்பமாகி வேகமாக நடைபெற்று வருகின்றது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
கல்கத்தாவில் விஜய் வில்லனைத் துரத்தும் காட்சிகளை இரவு பத்து மணியில் இருந்து அதிகாலை நான்கு மணி வரை படமாக்கி இருக்கிறார்கள்.
விஜய்க்கு வில்லனாக பெங்காலி நடிகர் டோடா ராய் சௌத்ரி நடிக்கிறார்.
கதைப்படி டோடா ராய் ஒரு இன்டர்நேஷனல் தாதா. அவரை இந்தியாவுக்குத் தந்திரமாக வரவைத்து பிடிக்க லோக்கல் கிரிமினலான விஜய்யின் உதவியை போலீஸார் நாடுகிறார்கள்.
அப்படி திட்டமிட்டு வில்லனை கொல்கத்த வரவைத்த விஜய், அவரை சேஸ் செய்து பிடிக்கும் காட்சிகளைத்தான் தற்போது படமாக்கிவருகிறார்களாம்.
இதனால் ஜெயிலுக்கு செல்கிறார் டோடா ராய். அதற்குப் பிறகு விஜய்யைப் பழிவாங்கப் புறப்படுகிறார். ஆனால், விஜய் மாதிரி இரண்டு பேர் இருப்பதைப் பார்த்து குழப்பம் அடைகிறார்.
இதில் யார் கிரிமினல் விஜய்? இன்னொரு விஜய் என்ன செய்கிறார்? வில்லனுக்கும் - விஜய்க்கும் ஏற்படும் மோதல் எப்படி முடிகிறது? என்பதுதான் படத்தின் கதை. விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார்.
அஜித்துக்காக தயார் செய்ய இரட்டைத் தலை படத்தின் கதையையே விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்குவதாகவும் கிசிகிசுக்கப்படுகின்றது.::
Comments
Post a Comment