12th of February 2014
சென்னை::சாதாரணமாகவே தன்னுடன் நடிப்பவர்கள் முன்னணி ஹீரோக்களாக இருந்தாலும், கவுண்டமணி பாணியில் வா போ என்று ஒருமையில் அழைப்பவர் சந்தானம். அதுமட்டுமின்றி, அவர்கள் ஹீரோக்கள் என்று கூட நினைக்காமல், சந்தடி சாக்கில் கலாய்த்து எடுத்தும் விடக்கூடியவர். இதனால், சில ஹீரோக்கள் நான் ஹீரோ சந்தானம், கொஞ்சம் அடக்கி வாசி என்று அவரிடம் காது கடித்து வருகிறார்கள்.
இப்படி ஹீரோக்களே தயவுகூர்ந்து கேட்டு வரும் நிலையில், காமெடியன்கள் தன் கையில் சிக்கினால் விடுவாரா சந்தானம். இதை தெரிந்து கொண்டதால் யாராவது சந்தானம் நடிக்கும் படத்தில் இன்னொரு காமெடியனாக நடிக்க பரோட்டா சூரியை அணுகினால், அதிரடியாக மறுக்கிறார். அதோடு, நீங்கள் ஒரு வசனம் சொல்லி நடிக்கச்சொல்வீர்கள். ஆனால் அவரோ, என்னை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காகவே, கவுண்டமணி, செந்திலை மிதிப்பது போன்று என்னை மிதிப்பார், கலாய்ப்பார். இப்போது எனக்கும் ஒரு மார்க்கெட் உருவாகி வரும் நேரத்தில் இதெல்லாம் தேவையா? என்று சந்தானத்துடன் கூட்டணி அமைக்க தயங்கி நிற்கிறார்.
ஆனால், சசிகுமார் நடித்துள்ள பிரம்மன் படத்தில் சந்தானம், சூரி இருவருமே நடித்துள்ளனர். அதேசமயம், கதைப்படி கிராமத்தில் இருந்து நகரத்துக்கு சசிகுமார் வருவதால், கிராமத்தில் அவரது நண்பனாக சந்தானத்தையும், நகரத்து நண்பனாக சூரியையும் வைத்து படமாக்கியுள்ளனர். ஆக, சந்தானம், சூரி இருவருக்கும் இணைந்து ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. இதனால்தான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தாராம் சூரி.

Comments
Post a Comment