11th of February 2014
சென்னை::மான் கராத்தே படப்பிடிப்பு நடந்த போது, ஒரு நாள் விடிய விடிய ஷூட்டிங்
நடந்ததாகவும், இதனால், சீக்கிரம் முடிங்கப்பா என, ஹன்சிகா டென்ஷன்
ஆனதாகவும், செய்திகள் ெவளியானது.
ஆனால், இப்போது ஜெயப்ரதாவின் மகன்
சித்துவுக்கு ஜோடியாக, ஹன்சிகா நடித்து வரும், உயிரே உயிரே
படப்பிடிப்புக்கு, அவர், முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக மாறுபட்ட செய்தி
ெவளியாகியுள்ளது.
படப்பிடிப்பு நடந்த குலு மணாலியில், கடும் குளிரையும்
பொருட்படுத்தாமல் நடித்த ஹன்சிகா, தினமும் மலை உச்சிக்கு ௪ கி.மீ., நடந்தே
சென்றாராம். கல்லிலும், முள்ளிலும் தடுமாறியபடி நடந்த போதும், எந்தவித
கோபத்தையும் காட்டாமல், இன்முகத்துடனேயே நடந்தாராம் ஹன்சிகா.
Comments
Post a Comment