யாரையும் காதலிக்கவில்லை – அதர்வா!!!

6th of February 2014
சென்னை::பரதேசி’ படத்திற்குப் பிறகு படு பிஸியாக இருக்கிறார் அதர்வா. அதே வேகத்தில் அவரைச் சுற்றி வரும் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லை.
 
அதர்வா தற்போது, “இரும்புக் குதிரை, ஈட்டி, கணிதன்,” ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
 
அதே சமயம் அவரையும் பல ஹீரோயின்களையும் சுற்றி காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.ஆனால், இவையெல்லாவற்றையும் மறுக்கிறார் அதர்வா.
 
இப்போதைக்கு லவ் பண்ற எண்ணமெல்லாம் கிடையாது. 24 வயசுதான் ஆகுது. இன்னும் சினிமாவுல சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.
 
சமந்தா, அமலா பால், ஜனனி ஐயர், பிரியா ஆனந்த், இவங்க கூடலாம் நடிக்கும் போது பிரண்ட்லியாதான் பழகறன். இவங்கள்ல பிரியா ஆனந்த் ரொம்ப சேட்டை பண்ற பொண்ணு. என்னை அடிக்கடி கலாய்ச்சிக்கிட்டே இருப்பாங்க. அவ்வளவுதான், வேற ஒண்ணுமில்லை,” என்கிறார் அதர்வா.
படங்கள்ல உருகி உருகி காதலிச்ச முரளி பையனா இருந்துக்கிட்டு இப்படி பேசினா எப்படி?..       
tamil matrimony_HOME_468x60.gif

Comments