10th of February 2014சென்னை::குறுகிய காலத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நஸ்ரியா. தடதட
புகார்கள் மூலம் மீடியாக்களிலும் பரபரப்பாக இருந்தார். வந்த ஒரு
வருடத்துக்குள்ளேயே தமிழ், மற்றும் மலையாள நடிகர்களுடன் காதல் என்று
கிசுகிசுக்கப்பட்டவர்.
இன்னொரு நயன்தாரா என்று
வர்ணிக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென பகத் பாசிலை திருமணம்
செய்யப்போகும் செய்தி அதிரடியாக வந்தது. ரசிகர்களும், உடன் நடிக்கும்
நடிகர்களும் கொஞ்சம் அசந்துதான் போனார்கள். இதுவதந்தியா, கிசுகிசுவா என
யோசித்துக் கொண்டிருக்கும்போதே இதோ நிச்சயதார்த்தமே முடிந்து விட்டது.
திருவனந்தபுரத்தில்
உள்ள தாஜ் ரெசிடென்சி நட்சத்திர ஓட்டலில் நேற்று (பிப்ரவரி 8) காலை நடந்த
திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பகத், மற்றும் நஸ்ரியா குடும்பத்தினர்
மட்டுமே கலந்து கொண்டனர். மீடியாக்கள் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை.
முஸ்லிம் முறைப்படி நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு
விருந்தினர்களுக்கு ஐதராபாத் ஸ்பெஷல் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
பின்னர்
மாலை 3 மணி அளவில் ஓட்டலில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் முன் பகத்தும்,
நஸ்ரியாவும் தோன்றி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இது தனிப்பட்ட குடும்ப
விழா என்பதால் மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன். வருகிற ஆகஸ்ட் 21ந் தேதி திருவனந்தபுரம் அல் சாஜ்
கன்வென்சென் செண்டரில் திருமணம் நடக்கிறது. அதற்கு எல்லோரையும் அழைப்போம்"
என்றார் மணமகன் பகத்தின் தந்தையும் பிரபல டைரக்டருமான பாசில்.::
Comments
Post a Comment