3rd of February 2014
சென்னை::கோச்சடையான் எப்போது வரும் என பலரும் ஆவலாய் காத்திருக்க இன்றைக்கு நாளைக்கு என பல திகதிகள் வெளியாகின. இருப்பினும் பாடல் கூட குறிப்பிட்ட திகதியில் வெளியாகவில்லை.
சென்னை::கோச்சடையான் எப்போது வரும் என பலரும் ஆவலாய் காத்திருக்க இன்றைக்கு நாளைக்கு என பல திகதிகள் வெளியாகின. இருப்பினும் பாடல் கூட குறிப்பிட்ட திகதியில் வெளியாகவில்லை.
இந்நிலையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது என இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான திரையரங்களில் தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஜப்பானிஸ், ப்ரெஞ்சு மற்றும் ஆங்கிலம் என 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இந்திய நட்சத்திரம் ஒருவரின் படம் இத்தனை மொழிகளில் நேரடியாக வெளியாவது இதுவே முதல் முறை.
தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ரஜினியே டப்பிங் பேசியுள்ளார். ஜப்பானிய மொழியில் அவர் முதலில் டப் செய்வதாக இருந்து, பின்னர் வேறு நபர் மூலம் டப் செய்யப்பட்டுள்ளது.
முப்பரிமாண திரைப்படமான கோச்சடையானில் ரஜினி இரு வேடங்களில் நடிக்க அவரது மகள் சௌந்தர்யா இப்படத்தினை இயக்கியுள்ளார்.
ஆங்கிலத்தில் சர்வதேச அளவில் தனியாக வெளியிட தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதுடன் பல்லாயிரம் திரையரங்குகளில் திரையிடவும் எதிபார்த்துள்ளது...
Comments
Post a Comment