ஆஹா...என்று நடைபெற்ற 'ஆஹா கல்யாணம்' இசை வெளியீட்டு விழா!!!

24th of January 2014சென்னை::தூம்' உள்ளிட்ட மாபெரும் பிரம்மாண்ட இந்தி வெற்றிப் படங்களை தயாரித்த யாஸ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், தற்போது தமிழில் தனது திரைப்பட தயாரிப்பை தொடங்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் முதல் தமிழ்ப் பட தயாரிப்பாக 'ஆஹா கல்யாணம்' படம் உருவாகியுள்ளது. இதில் ஞானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். விஷ்னு வர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தரண் இசையில், கார்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. எப்போதும் போல, இப்போதும் ஒரு பாடல்கள் வெளியீட்டு விழா என்று நினைத்து சென்றவர்கள் அனைவரையும் ஆஹா...என்று ஆச்சரியப்பட வைத்தது ந்த ஆஹா கல்யாணம் படத்தின் இசை வெளியீட்டு விழா.

விழா நடைபெற்ற அரங்கத்தை பிரம்மாண்ட திருமண மண்டபத்தைப் போல மாற்றியிருந்தார்கள். அதுமட்டும் இன்றி, படத்தின் ஹீரோ ஞானி, ஹீரோயின் வாணி கபூர், இயக்குநர் கோகுல் உள்ளிட்ட இசையமைப்பாளர், பின்னணி பாடகர்கள் என அனைவரும் வேட்டி, சட்டை, புடவை என்று உண்மையான கல்யாணத்தைப் போலவே சூழ்நிலையை மாற்றியிருந்தார்கள்.

இதில் இயக்குநர்கள் விஷ்ணு வர்தன், சமுத்திரக்கனி, தரணி, நடிகை சிம்ரன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டு படத்தில் உள்ள ஒவ்வொரு பாடல்களையும் அறிமுகப்படுத்தினார்கள். இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ள பிரபல பாடகி உஷா ஊதூப்பும் இதில் கலந்துகொண்டு, சக பாடகர்களுடன் இணைந்து பாட்டு பாடி அசத்தினார். 
::
tamil matrimony_HOME_468x60.gif

Comments