14th of January 2014
சென்னை::லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் 35 நாட்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்தப்படத்தில் அழகாக தாடி வளர்த்து ‘நந்தா’ படத்தில் இருந்ததைப்போல ஆளே மாறியிருக்கிறார் சூர்யா.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வரும் இந்தப்படத்தில் இப்போது யுடிவி நிறுவனமும் இணைத்தயாரிப்பாளராக இணைந்திருக்கிறது.
வேட்டை’ படத்தை தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸும் யுடிவியும் மீண்டும் கைகோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு ‘அஞ்சான்’ என அதிரடியான பெயரையும் சூட்டியுள்ளார்கள்.
படத்தின் பெயரே இது ஒரு பக்கா ஆக்ஷன் படம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. டைரக்ஷன் லிங்குசாமி என்பதால் அதை உறுதியாகவும் நம்பலாம். படத்திற்கு லிங்குசாமியின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஜனவரி இறுதியில் கோவா அதன் பின் மகாராஷ்ற்றாவின் பல பகுதிகளிலும் நடத்த இருக்கிறார்கள்.
Comments
Post a Comment