சந்தானத்தின் கையில் முன்னணி ஹீரோக்களின் படங்களாக இருந்தபோதும்: சந்தானத்துக்கு ஷாக் கொடுத்த பரோட்டா சூரி!!!

22nd of January 2014
சென்னை::சந்தானத்தின் கையில் முன்னணி ஹீரோக்களின் படங்களாக இருந்தபோதும், சில சமயங்களில் அவருக்கான வாயப்புகள் பரோட்டா சூரியிடமும் சென்று விடுகிறது. அந்த வகையில், தலைவாவில் விஜய்யுடன் சந்தானம் நடித்திருந்தார். ஆனால் ஜில்லாவில் சூரி நடித்திருந்தார். ஏற்கனவே வேலாயுதம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்த விஜய்யே, இந்த படம் மதுரை கதைக்களம் என்பதால், மதுரைக்காரரான சூரியை நடிக்க வைக்கலாம் என்று முன்மொழிந்தாராம். அதனால் விஜய்யின் ஏகோபித்த சிபாரிசின் பேரில் ஜில்லாவில் போலீசாக நடித்தார் சூரி.

இந்த நிலையில், சந்தானம், ஆர்யா, ஜீவா என சில நடிகர்களின் படங்களில் ரெகுலராக நடிப்பது போல், இப்போது விமல், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்களின் படங்களில் சூரி இருக்கிறார். அதிலும் விதார்த்துடன் நடித்துள்ள பட்டைய கிளப்பு பாண்டியா படத்தில் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ ரேஞ்சுக்கு நடித்துள்ளார். ஆக, சந்தானத்துக்கு நிகராக இப்போது சூரியும் பிசியாகி விட்டார்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில், கலகலப்புக்கு பிறகு விமல் நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் சந்தானம்தான் நடிப்பதாக இருந்தது. ஜெயங்கொண்டான், சேட்டை படங்களை இயக்கிய கண்ணன் இயக்கும் இந்த படத்திற்கு இப்போது சூரி புக்காகியிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே விமலும், சூரியும் கூட்டணி அமைத்த களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா போன்ற படங்கள் ஹிட்டாகியிருப்பதால் மீண்டும் அவர்களை இணைத்துள்ளார்களாம்.

ஆக, தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களில் நடித்துள்ள விமல்-சூரி இருவரும் தற்போது புலிவால் படத்திலும் இணைந்திருப்பவர்கள், ஐந்தாவதாக கண்ணன் படத்தில் இணையப்போகிறார்கள். இப்படி, தான் நடிக்க வேணடிய ஒரு மெகா படம் சூரி பக்கம் திரும்பி விட்டதால், மனதளவில் அதிர்ச்சியடைந்திருக்கிறாராம் சந்தானம், அடுத்தடுத்து பெரிய படங்கள் கைமீறிப்போகாமல்.:இருக்கும் உஷார் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments