புறம்போக்கு’ படத்தில் ஜனநாதனுடன் மீண்டும் இணையும் ஷாம்!!!

3rd of January 2014
சென்னை::தமிழ்சினிமாவில் ஷாமிற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தும் படமாக அமைந்தது என்றால் அது சில மாதங்களுக்கு முன் வெளியான ‘6 மெழுகுவர்த்திகள்’தான். முன்பு தான் நடித்த எந்தப்படங்களிலும் இல்லாத நடிப்பை இந்தப்படத்தில் காட்டியிருந்தார் ஷாம்.
 
அதனால் 2013ஆம் ஆண்டு அவரைப்பொறுத்தவரை ஒரு வெற்றிகரமான ஆண்டுதான். இந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் ஷாமிற்கு ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்.? உண்மைதான். ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் தற்போது முக்கியமான கேரக்டரில் ஷாமும் நடிக்க இருக்கிறார்.
 
ஜனநாதனின் முதல் படமான ‘இயற்கை’யில் கதாநாயகனாக நடித்தவர்தானே ஷாம். சொல்லபோனால் அந்தப்படம்தான் ஷாமிற்கு நல்லபெயரை வாங்கித்தந்த படமும் கூட. அதனால் ஜனநாதனுடன் ஷாம் மீண்டும் இணைந்திருப்பது அவரது திரையுலக வாழ்க்கையில் வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments