ஹன்சிகாவின் வாய்ப்புகள் தமன்னாவுக்கு!!!

15th of January 2014
சென்னை::
கவர்ச்சியை முன்வைத்துதான் கோடம்பாக்கத்தில் கொடி நாட்டினார் ஹன்சிகா. ஒரு கல் ஒரு கண்ணாடி ஹிட்டுக்குப்பிறகும் அதை தொடர்ந்தார். ஆனால் சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் ஹன்சிகாவிடம் எக்கச்சக்கமான திறமை ஒழிந்திருப்ப 
தாக பில்டப் கொடுத்ததையடுத்து, பர்பாமென்ஸ் வேடங்களில் நடித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விட்டார் ஹன்சிகா.

அந்த நேரம் பார்த்து, அரண்மனை படத்துக்கு ஹன்சிகாவிடம் பேசிய சுந்தர்.சி., அருந்ததி அனுஷ்காவையும், சந்திரமுகி ஜோதிகாவையும் கலந்து ஒரு அதிரடியான பர்பாமென்ஸ் வேடம் உள்ளது என்று சொல்ல, தன் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் நோக்கத்துடன் அந்த படத்தில் கமிட்டானார் ஹன்சிகா.

அதனால் இப்போது தன்னிடம் கதை சொல்வதற்கு எந்த டைரக்டர்கள் வந்தாலும், கதையை கேட்டு முடித்ததும், கவர்ச்சிகரமான காட்சிகளை குறிப்பிட்டு இந்த மாதிரி காட்சிகளில் எல்லாம் இனிமேல் நான் நடிக்க மாட்டேன். அரண்மனைக்குப்பிறகு எனது இமேஜே மாறப்போகிறது. அதனால் இனி ஜோதிகா நடித்தது போன்று திறமைக்கு முதலிடம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கப்போகிறேன் என்கிறாராம். இதனால் ஹன்சிகாவை மனதில் கொண்டு உருவான கதைகளுடன் சில இயக்குனர்கள் தமன்னாவை அழைத்து பேசி வருகின்றனர்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments