28th of January 2014
சென்னை::கோலி சோடா’வுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு கூடிக்கொண்டுதான் போகிறது. நான்கு சின்னப்பையன்களை வைத்து இப்படி ஆட்டம் காட்டியிருக்கிறாரே என இயக்குனர் விஜய்மில்டனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. லேட்டஸ்ட்டாக சமீபத்தில் ‘கோலி சோடா’ படத்தை பார்த்த நடிகை சமந்தாவும் ட்விட்டரில் படத்தைப் பற்றியும் அதில் நடித்தவர்கள் பற்றியும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

குறிப்பாக பக்கோடா பாண்டிக்கு ஜோடியாக ஏடிஎம் என்ற பள்ளிகூட சிறுமியாக நடித்திருந்த அந்த கண்ணாடி போட்ட சின்னப்பெண்ணின் நடிப்பு சமந்தாவை ரொம்பவே கவர்ந்து விட்டது. தனது உதவியாளர்களிடம் அந்தப்பெண்ணின் நடிப்பை புகழ்ந்துள்ளதோடு அந்த சிறுமியின் பெயர் என்ன என்றும் கேட்டிருக்கிறார்.
மேலும் அந்த சிறுமியின் டைமிங் சென்சையும் காமெடியையும் வியந்து பாராட்டிய சமந்தா, அந்த சிறுமியை நேரில் பார்த்தால் இறுக்கமாக கட்டிப்பிடித்து ‘நீ ஒரு புத்திசாலிப்பெண்’ என்று அவளிடம் சொல்லவேண்டும் என தனது விருப்பத்தையும் தெரியப்படுத்தியுள்ளார்.
Comments
Post a Comment