அறிமுகம் செய்தவரின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் ஸ்ரீதிவ்யா!!!

16th of January 2014
சென்னை::சினிமாவில் நடிகைகள் அறிமுகமாகும்போது கொடுக்கிறதை கொடுங்கள் என்று நல்ல பிள்ளையாகத்தான் வருவார்கள். ஆனால், ஒரு படம் ஓடியதும் தங்களது சுயரூபத்தை காட்டத் தொடங்குவார்கள். அதற்கு ஸ்ரீதிவ்யா மட்டும் விதிவிலக்கல்ல. முதலில் ஹோட்டல் அறையில் வசதியில்லை. கேரவன் சரியில்லை என்று தொடங்குபவர்கள், தனது படக்கூலியினையும் படத்துக்கு 5 லட்சமாக கிடுகிடுவென உயர்த்திக்கொண்டே செல்வார்கள்.

அதே பாணியைத்தான் இப்போது கடைபிடிக்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா. அப்படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனைப்போலவே திவ்யாவுக்கும் பெரிய ப்ளசாகி விட்டது. அதோடு, மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதால், வளர்ந்து வரும் நடிகை அவர்களை விட குறைச்சலாக கேட்பார் என்று பல கம்பெனிகள் மளமளவென்று ஸ்ரீதிவ்யா பக்கம் சாய்ந்து விட்டன.

அதனால், படத்துக்குப்படம் சம்பளத்தை ஏற்றியவர் இப்போது 50 லட்சத்தை தொட்டு நிற்கிறாராம். இது ரொம்ப ஜாஸ்தியா இருக்கே என்று மண்டையை சொறியும் படாதிபதிகளிடம், பேரம் பேசி என் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று நறுக்கென்று சொல்லிவிட்டு இடத்தை காலி பண்ணி விடுகிறாராம். இதனால், ஒரு படம் ஓடினதும் ரொம்ப ஓவரா பேசுதே இந்த பொண்ணு என்று தடுமாறிப்போய் நிற்கிறார்கள் படாதிபதிகள்
.
இந்த நிலையில், ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமான முதல் படமான காட்டுமல்லி இன்னும் திரைக்கு வரவில்லை. விதார்த் நடிப்பில் தயாரான அப்படம் பைனான்ஸ் பிரச்னையால் பல மாதங்களாக கிடப்பில் கிடந்தது. ஆனால், இப்போது மீண்டும் தூசு தட்டுகிறார்கள். இந்த நேரத்தில், மீதி படப்பிடிப்பில் கலந்து கொள்ள விதார்த் தயார்நிலையில் இருந்தும், ஸ்ரீதிவ்யா மட்டும் தயாராகயில்லையாம். அவரை தொடர்பு கொண்டபோது, நீங்கள் என்னை அறிமுகம் செய்தபோது நான் தமிழுக்கு புதுமுக நடிகை அதனால், நீங்களாகப் பார்த்து கொடுத்த 4 லட்சத்தில் நடிக்க சம்மதித்தேன். ஆனால், இப்போது நான் 40-ஐ கடந்து 50 லட்சத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் திரும்பவும் முதலில் இருந்து கணக்கை ஆரம்பிக்க என்னால் முடியாது. அதனால், இப்போது நான் வாங்கும் சம்பளத்தை கொடுத்தால் நடிக்கிறேன் என்று தில்லாக பேசி விட்டாராம்.

ஏற்கனவே பேசினதைவிட பல லட்சங்களை அதிகமாக தருகிறோம் என்று சொன்னபோது அம்மணி அசைந்து கொடுக்கவில்லையாம். இருப்பினும், ஸ்ரீதிவ்யாவின் மனசை கரைக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments