ஆர்வ கோளாறு’க்கு இசையமைக்கும் அனிருத்!!!

3rd of January 2014
சென்னை::ஆர்வ கோளாறுக்கு ‘ஆகோ’ என்று ஒரு பெயர் இருக்கிறதாமே..? நன்றாக ஏமாந்தீர்களா..? ஆர்வக்கோளாறை சுருக்கினால் கிடைக்கும் வார்த்தைதான ‘ஆகோ’’. இதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
 
மூன்று இளைஞர்களின் ஆர்வ கோளாறு காரணமாக ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே ‘ஆர்வ கோளாறு’ படத்தின் கதை என்கிறார் படத்தின் இயக்குனர் ஷ்யாம்.
 
தன்னைத்தேடி ஹீரோவாக நடிக்கச்சொல்லி வரும் பல வாய்ப்புகளை தட்டி கழித்து வரும் அனிருத், இசை மட்டுமே தனது திரையுலக பணி என்று திட்டவட்டமாக அதேசமயம் உரக்கவும் சொல்லி வருகிறார். அந்த வகையில் பல படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியும் வருகிறார். அப்படி தன்னைக் கவர்ந்த இந்த ‘ஆகோ’ கதைக்கு இசையமைக்க தற்போது இசையமைக்க ஒப்புக்கொண்ட அனிருத் சூப்பரான பாடல்களை இசையமைத்தும் கொடுத்திருக்கிறார்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments