31st of January 2014
சென்னை::மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படம் ‘மீகாமன்'. இப்படத்தில் ஆர்யாவின் ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே, ஆர்யா-ஹன்சிகா ஜோடி சேட்டை படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களது கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் பெரிதும் ரசித்ததால் மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.

ஹன்சிகா தற்போது மான் கராத்தே, வாலு, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு தெலுங்குப் படங்களும் கைவசம் உள்ளது. இந்நிலையில், மீகாமன் படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், கதாநாயகி முடிவாகி விட்டதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
மீகாமன் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மகிழ்திருமேனி இரண்டொரு
நாட்களில் படத்தின் நாயகியை அறிவிப்பதாக தெரிவித்தார். இரண்டு மூன்று வாரங்கள் கடந்தும் நாயகி குறித்தான அறிவிப்பு வெளியாகவில்லை.ஆனால், ஆர்யாவின் அடுத்த நாயகி ஸ்ருதிஹாசன், ப்ரியா ஆனந்த் என பல பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், மீகாமன் படத்தின் கதை ஹன்சிகாவிடம் சொல்லப் பட்டதாகவும், த்ரில்லரான அக்கதையில் நாயகியின் கதாபாத்திரம் அவருக்கு பிடித்து விட்டதால் உடனே ஓகே சொல்லி விட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. -
Comments
Post a Comment