இசைப்புயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

6th of January 2014
சென்னை::சினிமாவில் நீண்டகாலம் நீடித்திருப்பது ஒருவகை. ஆனால் நீண்டகாலமாகவே முதல் இடத்தில் இருந்து இறங்காமல் தன் ராஜாங்கத்தை நடத்தி வருவது இன்னொருவகை.. இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இரண்டு ஆஸ்கர் விருதுகள். இரண்டு கிராமி விருதுகள், ஒரு கோல்டன் குளோப் விருது, நான்கு முறை தேசிய விருதுகள், 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட இன்னும் பட்டியலில் அடங்காத பல விருதுகளுக்கு சொந்தக்காரரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நாம் அளித்திருக்கும் கௌரவம் தான் இசைப்புயல்’ பட்டமும் மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற பட்டமும்.
தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டியிருக்கும் இந்த மகா கலைஞனுக்கு இன்று பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ பூந்தளிர்.தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
tamil matrimony_HOME_468x60.gif

Comments