தனுஷுடன் ஜோடிசேர்ந்தார் அலியா பட்!!!

22nd of January 2014
சென்னை::இந்தியில் கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்து ஹிட்டான ‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்’ பாலிவுட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் அலியா பட்.
 
தன் முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்தவர், தற்போது தமிழர்களின் நெஞ்சத்திலும் குடியிருக்க வருகிறார். ஆமாங்க அதுவும் தனுஷுக்கு ஜோடியாக.
 
கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படத்திலேயே தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்கவேண்டியது. ஆனால் அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனது. அதனால் என்ன.? இப்போது க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்துவிட்டதே. அதனால் நழுவிய பட வாய்ப்பு கிடைத்ததில் இருவருக்கும் சந்தோஷம் தான்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments