சிம்புவின் நியூ இயர் பாடல்!!!

3rd of January 2014
சென்னை::மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் சிம்பு.

நடிகர் சிம்பு தன்னுடைய படங்கள் மட்டுமல்லாது, நட்புக்காகவும் பிற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் பாடி வருகிறார், இந்நிலையில் லேட்டஸ்டாக மகாபலிபுரம் படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றைப் பாடி அசத்தியுள்ளார்.
இதில் விநாயக், ‘சூதுகவ்வும்’ கர்ணா, ரமேஷ் கார்த்திக், வெற்றி, அங்கனாராய், பிருத்திகா உள்பட பலர் நடிக்கினறனர். இந்த படத்தை டான் சாண்டி இயக்குகிறார். இவர் பூபதிபாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். யுகபாரதி எழுதிய இப்பாடலுக்கு கே. இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ‘முகமூடி’, ‘யுத்தம் செய்’ படங்களுக்கு இசையமைத்தவர். இது காமெடி, திரில்லர் படமாக தயாராகிறது.
சிம்பு பாடிய புத்தாண்டு பாடல் ”ஹேப்பி நியூ இயர்” பாடலை ஓரம்கட்டிவிடும் என்று கோடம்பாக்க வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments