21st of January 2014சென்னை::இன்று தமிழ்சினிமாவில் காமெடி படங்களின் ஏகபோக சக்கரவர்த்தி யாரென்றால் அது இயக்குனர் சுந்தர்.சி தான். குறிப்பாக ஆள்மாறாட்டக் காமெடியில் இவரை அடித்துக்கொள்ள இன்று வரை ஆளே இல்லை. தன் படங்களில் கவுண்டமணியை துணைக்கு வைத்துக்கொண்டு இவர் ஆடிய ருத்ர தாண்டவத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிடமுடியாது. அதேபோல காலமாற்றத்திற்கேற்ப வடிவேலு, சந்தானம் ஆகியோருடன் கைகோர்த்து இறங்கி அடிக்கவும் அவர் தவறவில்லை.
ஒரு நடிகராகவும் வெற்றிக்கொடி நாட்டிய சுந்தர்.சி, கடந்த இரண்டு வருடங்களாக நடிப்புக்கு தற்காலிக விடுப்பு கொடுத்துவிட்டு ‘கலகலப்பு’, ‘மதகஜராஜா’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களை இயக்கினார். அதில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.
தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கும் சுந்தர்.சி இந்தமுறை வெளிநபர்களின் டைரக்ஷனில் நடிக்காமல் ‘அரண்மனை’ படத்தை தானே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சுந்தர்.சிக்கு poonththalir-kollywood.blogspot.com தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.::
Comments
Post a Comment