4th of January 2014
சென்னை::ஆரம்பம் படத்தையடுத்து அஜீத் நடித்துள்ள புதிய படம் வீரம். அவருடன் தமன்னா, சந்தானம், விதார்த், அப்புக்குட்டி, பாலா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் முதல் பிரஸ்மீட் சென்னை வடபழனியிலுள்ள ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. அஜீத் உள்ளிட்ட படத்தில் நடித்தவர்கள் யாருமே கலந்து கொள்ளாத அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், டெக்னீசியன்கள் மட்டுமே பங்கேற்றனர்.
அப்போது, அஜீத் கலந்து கொள்ளாதது பற்றி யாருமே கேட்காத நிலையில், இந்த படத்தின் கதையைப்பார்க்கையில், முரட்டுக்காளை படத்தில் ரஜினியும், அவரது தம்பிகள் 4 பேரும் போலவே, அஜீத்துடன் 4 தம்பிகளும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்களே? அப்படியென்றால் இப்படம் முரட்டுக்காளை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, அண்ணன்-தம்பி சம்பந்தப்பட்ட செண்டிமென்ட் கதையில் உருவாகியிருப்பதால், அஜீத்துக்கு சில தம்பிகளும் இருப்பதுபோல் ஸ்கிரிப்ட் அமைந்தது. மற்றபடி ரஜினியின் முரட்டுக்காளைக்கும் இந்த படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னார் டைரக்டர் சிவா.
அதையடுத்து, இப்படத்தில் தமன்னா எந்த மாதிரி ரோலில் நடித்திருக்கிறார்? என்றதற்கு,
தமன்னாவை இதற்கு முன்பு நான் இயக்கிய சிறுத்தை படத்தில்கூட சரியாக பயன்படுத்தவில்லை. ஆனால், இந்த படத்தில் அவர்தான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை சுற்றிதான் மொத்த கதையும் நகர்கிறது. அதனால் இதுவரை தமன்னாவை ஒரு கிளாமர் ஹீரோயினாக மட்டுமே பார்த்தவர்கள் இப்படத்தில் அவரது பர்பாமென்ஸைப்பார்த்து அசந்து போவார்கள். ஆக, ஒரு மாறுபட்ட தமன்னாவை இந்த வீரம் படத்தில் காண்பித்திருக்கிறேன் என்றார்.

Comments
Post a Comment