யுவன்-வைரமுத்து முதன்முறையாக இணையும் ‘இடம் பொருள் ஏவல்!


21st of January 2014
சென்னை::
பையா’, ‘வழக்கு எண் 18/9, ‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி-விஷ்ணு கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இயக்கத்தில் ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்தில் ஏற்கெனவே நடித்துள்ளார். அதேபோல், விஷ்ணுவும் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘நீர்ப்பறவை‘ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் சீனு ராமசாமியுடன் இவர்கள் இணைந்துள்ளனர்.

மேலும், இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதவுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுவது இதுவே முதல் முறையாகும். இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் லிங்குசாமி இருவரின் விருப்பத்தினை ஏற்று யுவன் சங்கர் ராஜா, வைரமுத்து கூட்டணி இப்படத்திற்காக முதன்முறையாக இணைகிறது.

இப்படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் கொடைக்கானலில் தொடங்குகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments