6th of January 2014
சென்னை::இசை அமைப்பாளர் இளையராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு இருதய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருதயத்தில் இரண்டு இடங்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் ஆஞ்சியோகிராம் சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. ஒரு வாரம் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற இளையராஜா பூரண நலத்துடன் வீடு திரும்பினார்.
வீட்டில் மூன்று நாட்கள் ஓய்வெடுத்த பிறகு மீண்டும் தனது இசை பணிகளை துவக்கி விட்டார். பாடலாசிரியர் சினேகன் நடிக்கும் இராஜராஜ சோழனின் போர்வாள் என்ற படத்திற்கு நேற்று (ஜனவரி 5) இசை அமைத்தார்.
தனது ராசியான பிரசாத் லேப் தியேட்டரில் இந்த இசை அமைப்பு நடந்தது. அப்போது சினேகனும் உடன் இருந்தார். 2014ம் ஆண்டில் இளையராஜா இசை அமைத்திருக்கும் முதல் பாடல் இது.

Comments
Post a Comment