நானும் படம் இயக்கப் போறேன்:

22nd of January 2014
சென்னை::ஒரு காலத்தில் காதல் நாயகன். இவரும் நதியாவும் சேர்ந்து நடிக்கும் போதெல்லாம், ஆஹா... என்ன ஒரு ஜோடி என்று தமிழகமே திருஷ்டி சுற்றியது. இருவரும் இரு துருவங்களாகி குழந்தை குட்டி என தனித்தனியே செட்டிலான பிறகு மீண்டும் நடிக்க வந்தார்கள். நதியாவுக்கு ஒன்றிரண்டு நல்ல படங்களாவது வாய்த்தது. ஆனால் இவருக்கு...? நடிகர் சுரேஷைதான் சொல்கிறோம்.
 
முக்கியத்துவம் இல்லாத வளவள கேரக்ட‌ரில் சுரேஷை வீணடித்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. இதே ரூட்டில் போனால் ‌ரிட்டையர்ட்மெண்ட் சீக்கிரம் நெருங்கிவிடும் என்பதை யூகித்தவர் ட்ராக்கை மாற்றுகிறார். இந்த வருடம் சுரேஷ் எடுத்துக் கொண்ட புத்தாண்டு சபதம், இயக்குனராவது.
 
எல்லோரையும் போல ரொமாண்டிக் காமெடி ஒன்று, த்‌ரில்லர் ஒன்று என இரண்டு ஸ்கி‌ரிப்ட்கள் வைத்திருக்கிறார். இரண்டில் எதில் தயா‌ரிப்பாளர் விழுகிறாரோ அது முதலில்.
 
இந்த இயக்குனர் முயற்சி சுரேஷுக்கு முழுமையை தரட்டும். .
tamil matrimony_HOME_468x60.gif

Comments