19th of January 2014
சென்னை::தன்னுடன் ஷூட்டிங்கில் பங்கேற்ற நயன்தாராவுடன் தனிமையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசினார் சிம்பு.‘வல்லவன் படத்தில் இணைந்து நடித்து காதலர்களாக வலம் வந்தனர் சிம்பு, நயன்தாரா. இவர்களுக்கிடையே திடீர் முறிவு ஏற்பட்டது.
சென்னை::தன்னுடன் ஷூட்டிங்கில் பங்கேற்ற நயன்தாராவுடன் தனிமையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசினார் சிம்பு.‘வல்லவன் படத்தில் இணைந்து நடித்து காதலர்களாக வலம் வந்தனர் சிம்பு, நயன்தாரா. இவர்களுக்கிடையே திடீர் முறிவு ஏற்பட்டது.
பின்னர் பிரபுதேவாவுடன் நயன்தாரா நெருக்கமாக பழகினார். அவர்களுக்குள் மலர்ந்த காதலையடுத்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். ஆனால் அதிலும் சிக்கல் ஏற்பட்டது. பிரபுதேவாவை விட்டும் பிரிந்தார் நயன்.
இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்நிலையில் ‘பசங்க‘ பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டார். அதில் ஹீரோயினாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் முடிவு செய்தார்.நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டபோது நடிக்க ஒப்புக்கொண்டார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் சிம்பு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
3 நாட்களுக்குமுன் ராமாவரத்தில் நடந்த ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்துகொண்டார். அவர் நடித்த முக்கிய காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். 2 நாள் தனிமையில் நயன்தாரா நடித்த காட்சி படமாக்கப்பட்டபிறகு அமெரிக்காவிலிருந்து திரும்பிய சிம்பு ஷூட்டிங்கில் பங்கேற்றார்.
மாஜி காதலர்கள் ஒரே ஷூட்டிங்கில் பங்கேற்றதால் பட யூனிட்டே படபடப்பில் இருந்தது. ஆனால் இருவரும் சிரித்த முகத்துடன் ஒருவரைப்பார்த்து ஒருவர் ஹாய் சொல்லிக்கொண்டனர். ஷூட்டிங் இடைவேளையில் இருவரும மணிக்கணக்கில் அருகருகே அமர்ந்து மனம்விட்டு பேசினார்கள். இது யூனிட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. 5 நாள் ஷூட்டிங்கை முடித்துக்கொடுத்துவிட்டு நயன்தாரா பெங்களூர் புறப்பட்டு சென்றார்.
ஜெயம் ரவி நடிக்கும் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அவர்களது காட்சிகளை ஜெயம் ராஜா படமாக்கினார்.சிம்புவும் ஹன்சிகாவும் திடீர் காதலர்கள ஆனார்கள். திடீரென்று மலர்ந்த காதல் அதேவேகத்தில் பிரிவையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில்தான் நயன்தாராவுடன் சிம்பு மீண்டும் நடிக்கிறார். அவர்களிடையே நெருக்கம் ஏற்படலாம் என சினிமா வட்டாரத்தில பேசப்படுகிறது.
Comments
Post a Comment